மலேசிய சமூக நல மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா )வின் கூட்டரசு பிரதேச மாநில தீபாவளி பரிசு கூடை வழங்கப்படும் நிகழ்வு …
நேற்று 11/11/2020-ஆம் நாள் முதல் முறையாக செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவைகளை தேசிய தலைவராக கொண்டிருக்கும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம் (அரிமா) தீபாவளி திருநாளை முன்னிட்டு அதன் கூட்டரசு பிரதேச மாநில உறுப்பினர்களுக்கு தேனீர் விருந்து மற்றும் தீபாவளி அன்பளிப்பு பரிசு கூடைகளை வழங்கியது.
ஒரு நல்ல நோக்கத்துடன் இந்த நிகழ்வு ,நேற்று தலைநகர் பிரிக்பீல்ட்ஸ்யில் அமந்த்த்துள்ள அச்சுத வாழை இலை உணவகத்தில் நடைபெற்றது.கூட்டரசு பிரதேச மாநில அரிமாவும் அச்சுதா வாழை இலை உணவக உரிமையாளர் திரு.தங்கராஜ் மாணிக்கம் அவர்களும்
ஒன்றிணைத்து ,தற்போது நாட்டில் பரவலாக காணப்படும் கோவிட்-19 உயிர் கொல்லி நோய் தொற்று காரணமாக மிக எளிய முறையில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை கட்டுப்பாட்டு(எஸ்ஒபி)உடன் இந்த நிகழ்வு நடைபெற்றது .
இந்த மகிழ்ச்சியான நிகழ்வுக்கு பிரமுகர்களாக அரிமாவின் கூட்டரசு பிரதேச மாநில தலைவர் திரு.மணிவண்ணன் ரத்தினம் , அரிமா இயக்கத்தின் பொது செயலாளர் திரு. பிரகாசஷ் ராவ் மற்றும் தொழிலதிபர் டத்தோஶ்ரீ தண்ணிமலை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
அரிமா கூட்டரசு பிரதேச உறுப்பினர்களுக்கு அன்பளிப்பு பரிசு கூடைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கிய போது பேசுகையில் ,
சர்வதேச கொடிய நோய் தொற்று பரவல் காலகட்டத்தில் வீன் விரயங்களை தவிர்த்து சிக்கனமாகவும் விவேகத்துடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.
தற்போது நாட்டை உயிர் கொல்லி நோயான கொரோனா கிருமி நோய் தொற்று பீடித்திருந்தாலும் இந்த சூழலோடு ஒன்றிணைந்து வாழப்பழகி கொண்டு வருகிறோம் . நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது .நிர்ணயக்கபட்ட நடைமுறை கட்டுப்பாட்டுகளை முறையே பின்பற்றினால் இந்த பீடிப்பில் இருந்து வெகுவிரைவில் நாம் விடுபட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது .நோய் பீடிப்பு சங்கிலி தொடராமல் பாதுகாத்து விவேகமாக நிர்வகிக்க முடியும் .
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் வேலைகளை இழந்து வருமானங்களையும் இழந்து ,ஊதியம் பற்றாக்குறையானலும் ஆண்டுக்கு ஒருமுறை நாம் கொண்டாடிமகிழும் தீபாவளி திருநாள் வந்து விட்டது . இந்த பெருநாள் காலகட்டத்தில் நாம் நம் பொருளாதார இருப்பு மற்றும் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மிகவும் சிக்கனமாகவும் சிந்தித்து விவேகமாகவும் செலவுகளை குறைந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் .
தேவையற்ற விரயங்களையும் அனாவசிய செலவுகளையும் தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனை கட்டுப்பாட்டு ஆணையை மனதில் நிறுத்தி சிக்கனமாகவும் விவேகமாகவும் தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும் என்று ,மஜ்லிஸ் ககாசன் மலேசியாவின் தலைவர் மற்றும் ஹார்வர்ட் வணிக பள்ளியின் முன்னால் மாணவர்கள் கழகத்தின் ஆட்சிகுழு உறுப்பினருமான திரு.மணிவண்ணன் ரத்திணம் கூறினார் .மலேசிய வாழ் அனைத்து இந்திய வம்சாவழிகளுக்கும் தன் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார் .
#askmani