2021 -ஆம் ஆண்டு மத்திய அரசு வரவு செலவு திட்டத்தில் சிறும்பான்மை சமூக ஓரங்கட்டபட்டது தெள்ள  தெளிவாக தெரிகிறது. குறிப்பாக நம் இந்திய சமுதாயத்திற்க்கு மிக சிறிய அளவு ஒதுக்கீடுகள் தான். 

Manivannan Rethinam

             2021-ஆம் ஆண்டின் வரவு செலவு  திட்டம் அனைவருக்கும் மிகவும் தாராளமாகவும் மற்றும் நியாயமாகவும் வரையப்பட்டது என்று கருத்துக்கள் வந்தவன்னமாக உள்ளது உண்மையா? அப்படி 
 அது உண்மையாக இருந்தால், பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாதவர்கள் என்று பிரித்து அல்லது ஓரங்கட்டபடுவதோ கூடாது. அடிப்படையில் பார்க்கும் போது ,வரவு செலவுத் திட்டம் பிரிக்கப்படவோ அல்லது ஓரங்கட்டப்படவோ கூடாது. பூமிபுத்ரா  மற்றும் 
 பூமிபுத்ராஅல்லாதவர்களுக்கும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள்  அல்லாதவர்களுக்கும் / மலாய்க்காரர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்து ஒதுக்கீடு வரையப்பட்டு இருக்கும் நிலையில் , இது எப்படி அனைவருக்கும் தாராளமாகவும் நியாயமாகவும் உள்ள வரவு செலவு திட்டம் என்று கூறப்படுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மஜ்லிஸ் ககாசான் மலேசியாவின் தலைவர் திரு.மணிவண்ணன் இரத்தினம் கூறினார் .
 இனம் / மதம் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட இந்த வரவு செலவு திட்டத்தில் எனது வாதத்தை ஆதரிக்கும் நோக்கம் பின் வருமாறு .

பூமிபுத்ரா அல்லாத மற்றும் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பத்து லட்சங்கள்(மில்லியன்கள்) :-
1.) 100 மில்லியன் ரிங்கிட் – 
இந்திய சமூகத்தின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு.
  2.)20 மில்லியன் ரிங்கிட் –
தெகுன் – இந்தியர்கள் தொழில் முனைவர்கள் மேம்பாட்டுக்கு . (ஸ்கிம் பெம்பங்குனன் உசஹவன் மஸ்யாரகாட் இந்தியா)”SPUMI”
  3.) 5 மில்லியன் ரிங்கிட் –
மற்ற சிறுபான்மையினருக்கான தெக்குன் தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டம் .
 4.) 177 மில்லியன் ரிங்கிட் –
 சீன சமூகத்திற்கு கல்வி வசதிகள் மற்றும் புதிய கிராமங்களுக்கான 
 ஒதுக்கீடு.

மொத்த ஒதுக்கீட்டை பார்த்தோமேயானால் 302 மில்லியன் ரிங்கிட் .ஏறக்குறைய 2.36%.

இப்பொழுது 
பூமிபுத்ரா / முஸ்லிம்கள் சமுதாயத்திற்கு நூறுகோடிகள்  (பில்லியனில்)
 1.) 6.5 பில்லியன் ரிங்கிட் –
  பூமிபுத்ராக்கலுளுக்கு பல்கலைக்கழக ஒதுக்கீடு .
  2.) 4.6 பில்லியன் ரிங்கிட் –
பூமிபுத்ரா தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு .
  3.) 1.4 பில்லியன் ரிங்கிட் –
இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமரின் துறைக்கு ஒதுக்கீடு. மொத்த  ஒதுக்கீடு 12.5 பில்லியன் ரிங்கிட் .(12,500.00 மில்லியன்) – 97.64%. ஆக 12.802 பில்லியனின் ரிங்கிட் மொத்த ஒதுக்கீட்டில், பூமிபுத்ரா அல்லாத / சிறுபான்மை சமூகத்திற்கு 2.36% மற்றும் குறிப்பாக இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டைப் பார்த்தால், அது ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் வெறும் 0.94%. மட்டுமே 
       இதனால் சிறுபான்மை குடிமக்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது தவறல்ல. எங்கள் சொந்த நாட்டில் 3 ஆம் வகுப்பு  மக்களாக கருதப்படுகிறார்கள் மற்றும் பூமிபுத்ரா 1 ஆம் வகுப்பு மக்களாக கருதப்படுகிறார்கள் . மலேசிய குடிமக்களுக்கு இதில் நேர்மை எங்கே? இஸ்லாம் உட்பட அனைத்து மதங்களும் கற்பிப்பது 
 மக்களை நியாயமாகவும் சரிசமமாகவும் நடத்தப்பட்ட  வேண்டும் என்பதே. ஆனால் எங்கள் பட்ஜெட் அதை அடைவதற்கு தொலைதூரத்தில் கூட இல்லாமல் 
 புறநிலையில் உள்ளது . இதனால் பூமிபுத்ரா அல்லாத குடிமக்கள் வரும் காலங்களில் மிககுறைந்த அளவில்  வரிகளை செலுத்த வித்திடுமா?என்றார்.

    2021 -ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தெளிவாக சமத்துவமாக கூறப்பட்டிருந்தால் கேள்வி எழுப்ப முற்படபோவதில்லை.   
 சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக இந்தியர்களை ஓரங்கட்டுவதை அரசாங்கம் தடுக்கவேண்டும்.
 வறுமை “POVERTY” என்பது ஒரு “வைரஸ்” போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது நிறம், இனம் அல்ல, மதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதில்லை.
 நாங்கள் கேட்பதெல்லாம், அரசாங்கம் நாட்டு மக்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடர வேண்டும் .
 சிறுபான்மை இந்திய சமூகத்தை ஓரங்கட்டாமல் பல்வேறு விதமான முயற்சிகளை தொடரவேண்டும் என்பதே. 
     இந்திய சமூகத்தின்  குறிப்பிட்ட ஒதுக்கீட்டைத் தவிர, வேறு சிலவற்றிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.
 குறிப்பாக மலேசியர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் கோவிட் -19 தொற்று நோய் தடுப்பூசி மருந்துகள் மற்றும் “ஜாசா” எனப்படும் தகவல் மற்றும் பல்லூடக அமைச்சின் சிறப்பு விவகாரங்களுக்கான திணைக்களம் இலாகாவிற்க்கு ஒதுக்கிய தொகையும் ஆகும் .
 சுகாதார அமைச்சுக்கான செலவு தொகை ஒதுக்கீடு  குறைக்கப்பட்டுள்ளதைப் பார்ப்பதற்கு ஆபத்தானதாக இருக்கின்றது .
 சிறுநீரகவியல் ,மருந்தகம் மற்றும் இதர பொருட்கள், இருதய சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல், பொது
 மருத்துவம், மயக்கவியல் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ,சுவாச மருத்துவம், மற்றும் உளவியல் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக 
 9.11% முதல் 77.61% வரை குறைக்கப்பட்டுள்ளது. 
தர்க்கரீதியாக, தொற்று நோய் பரவல்
 கால கட்டத்தில் நிதி சிக்கல்கள் கொண்டிருக்கும் பொழுது ,பல மலேசியர்கள்  இலவசமாகவும் குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அரசாங்க மருத்துவமனை மற்றும் மருந்தகங்களுக்கும் முக்கிய பகுதிகளுக்கான  செலவின ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
 சிறுநீரக மருந்தகம் மற்றும் பொருட்கள், இருதய மற்றும் கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோயியல்,
 இது முறையே 77.61%, 73.58%, 66.70% மற்றும் 59.49% குறைந்துள்ளது. 
 கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பிற நோய்கள் மற்றும் நோயாளிகளின் மற்ற நோய்கள் விரைவாகவும் பெரிய அளவில் தொற்றும் என்று அரசாங்கம் கருதுகிறது.

பரவலாக ,மருந்துகள் பற்றாக்குறை மற்றும் நீண்டகால காத்திருப்பு பட்டியல்கள் குறித்து அடிக்கடி புகார்கள் வருகின்றன.
 ஆய்வக சேவைகள் தேவைப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்கு, இந்த பட்ஜெட் குறைப்பு நிச்சயமாக இருக்கும்.
 சரியான நேரத்தில் சிகிச்சைகள் அளிக்காமல் தாமதப்படுத்துதல் நிலமையை மோசமாக்கும் .
 பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளதாக மறுத்து நிதி அமைச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
 சுகாதார அமைச்சகம் மற்றும் அது வளர்ச்சி செலவினத்தின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

        எவ்வாறாயினும், செயல்பாட்டு செலவினப் பொருட்கள் வளர்ச்சியின் கீழ் நிறுத்தப்படுவது நியாயமற்றது என்று நாங்கள் கருதுகிறோம்.
  தவறான கணக்கு மற்றும் செலவுகள் காரணங்களுக்காக ஆக்கபூர்வமான கணக்கியல் என்று அழைக்கப்படலாம்.
3 பில்லியன் ரிங்கிட் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு அறிவியல் , தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்தின் அமைச்சரின் உத்தரவாதம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம்.
 கோவிட் -19 தடுப்பூசிக்கும் அதன்  சார்ந்த பொருட்களுக்கு எந்த ஒதுக்கீடுகளும் காணப்படவில்லை. மலேசிய அரசாங்கம் பிறகு எப்படி அதனை வாங்கும் ?
 அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் தடுப்பூசி சேர்க்கப்படாவிட்டால் அதை எப்படி வாங்கபடும்?

   மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் சிறப்பு விவகாரங்களுக்கான திணைக்களம் (ஜாசா) மீண்டும் செயல்படுத்தப்பட்டது. இந்தகால கட்டத்தில் மிகப்பெரியது
 கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது 81 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மிகவும் வியப்பை அளிக்கிறது .
 கடந்த காலத்தில் “ஜாசா” 30 மில்லியனுக்கும் குறைவான வருடாந்திர பட்ஜெட்டில் தான் ஒதுக்கப்பட்டது. அரசு,
 முன்னணி வரிசையில் இருந்து சேவையாற்றும் பொதுசேவை ஊழியர்களுக்கு  முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு அதிக செலவுசெய்யப்பட்டவேண்டும்,எனவே “ஜாசா” பட்ஜெட் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் .
 சுகாதார அமைச்சகத்திற்கு அதிக 
 பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசாங்கம் நியாயமான முறையில் திருத்தம் செய்து வழங்கப்பட்ட வேண்டும் ,என்று நாங்கள் நம்புகிறோம். 

     பூபிபுத்ரா/மலாய் சமூகத்துடன் இந்திய சமுதாயத்தை ஒப்பிடாமல் சீன சமூகத்தோடு அல்லவா ஒப்பிடவேண்டும்.காரணம் பொருளாதாரத்தில் சீன சமூகமே பெரிய அளவில் மலேசியாவில் வளர்ச்சி அடைந்துள்ளனர் .தேசிய பொருளாதாரத்தில் 1.5% கூட அடைய முடியாத இந்திய சமுதாயத்துடன் மலாய் சமுதாயத்தை ஒப்பிட்டுவதற்கு பதிலாக கல்வி ,பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ள சீன சமூகத்துடன் ஒப்பிட்டால்  ஒரு நியாயம் இருக்கும் . 

    எனவே பூமிபுத்ரா /மலாய் சமுதாயத்திற்கு தொடர்ந்து பொறுப்பு டன் அவர்கள் பொருளாதாரத்திற்கும் மேம்பாட்டிற்கும் பல முயற்சிகளை தொடர்வ்தோடு,சமூக குறிப்பிட்ட ஒதுக்கீடுகளுக்காக இதியர் மக்கள் தொகை அடிப்படை விகிதத்துடன் தொடர்புடைய ஒதுக்கீடு மானியங்களை வழங்கப்பலாமே,உதாரணமாக 7.9% மக்கள் தெகைக்கு ஏற்ப 1.01 பில்லியன் தெகையை ஒதுக்கீடு செய்து இந்தியர்கள் சமூக உயர்வுக்கும் பெருளாதாரத்தை உயரத்துவதற்க்கும் வகையிலும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட வேண்டும் என்று ,
 மஜ்லிஸ் ககாசன் மலேசியாவின் தலைவர்  மற்றும் மலேசிய சமூகநல மறுமலர்ச்சி இயக்கம் .
  (அரிமா) வின் கூட்டரசு பிரதேச  மாநிலத் தலைவர். அவர் மேலும்
 மலேசிய ஹார்வரட் வணிக பள்ளியின் முன்னால் மாணவர்கள் கழகத்தின் ஆட்சிகுழு  உறுப்பினரும் ஆவார்.

 மணிவண்ணன் ரெத்தினம், ஏ.எம்.பி.
தலைவர்
மஜ்லிஸ் ககாசன் மலேசியா
 #askmani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *