நாட்டின் முன்னால் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அவர்கள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நாட்டின் அடுத்தாண்டு வரவு செலவு திட்டத்தை பற்றிய தமது விவாதத்தின் போது இந்திய சமுதாயத்திற்காக குரல் கொடுத்ததை தாம் மதிப்பதாகவும் அதை வெகுவாக வரவேற்று தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக அரிமா எனும் மலேசிய சமூக நல மறுமலர்ச்சி இயக்கத்தின் கூட்டரசு பிரதேச பிரிவின் மாநில தலைவர் திரு .மணிவண்ணன் ரத்திணம் தெரிவித்தார் .
முந்தய நம்பிக்கை கூட்டணி (பிஎச்) அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட “மலேசிய இந்திய வரைபடத்தை “(Malaysian Indian Blueprint) தொடர்ந்து செயல் படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று மக்களவையில் தெரிவித்தார் .
திரு.மணிவண்ணன் ரத்திணம் கூறுவது என்னவென்றால் , மலேசியாவில் நஜீப் அவர்கள் மட்டுமே அவர்தம் பதவி காலத்தில் நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்கள் ஓரங்கட்டபடாமலும் ,நிதி மற்றும் மானிய ஒதுக்கீடுகளில் இருந்து பின் வாங்கப்படவும் இல்லை என்பது ஆணித்தமான உண்மை . அவர் இந்திய சமூகத்துடன் தொடர்புடைய பல் வேறு பிரச்சனைகளை தீர்ப்பதில் மிகுந்த அளவில் அக்கறை எடுத்துக்கொண்டார் .உதாரணமாக
நஜீப்பின் அரசாங்கம் ஆறு புதிய தமிழ் பள்ளிகளை ஸ்தாபனம் செய்ய ஒப்புதல் வழங்கி மேலும் சிறப்பு மானியத்தை கொடுத்தார் . அவர் தனது முன்னோடிகள் போலில்லாமல் இந்திய சமுதாய பொருளாதாரத்தை மாற்றி அமைக்கவும் மேம்படுத்தவும் நிறைய பங்களிப்பை ஆற்றியுள்ளார் என்பதை மறுக்க முடியாது என்பதை மஜ்லிஸ் ககாசான் மலேசியாவின் தலைவர் மற்றும் ஹர்வர்ட் வணிக பள்ளியின் முன்னால் மாணவர்கள் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினருமான திரு .மணிவண்ணன் ரத்திணம் கூறினார் .
#askmani